12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழாவுக்காக உத்தரகாண்ட மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரம் தயாராகி வருகிறது.

ஒரு மாதம் நடைபெறும் இந்த விழாவில் நாளொன்றுக்கு சுமார் பத்து லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய நாட்களான ஏப்ரல் 12, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மட்டும் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹரித்வாரில் உள்ள கங்கை கரையில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒரு மாதத்தில் மொத்தம் 10 கோடிக்கும் அதிகமானோர் இங்கு வந்து புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரித்வாரில் உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத்

கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் இந்நேரத்தில் இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடுவது பெருத்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதனை சமாளிக்க தேவையான அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹரித்வார் ரயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக காத்திருக்கும் பக்தர்கள்

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் இங்கு குவிந்து வரும் நிலையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரத் சிங் ராவத் நேரில் பார்வையிட்டார்.