கிராண்ட் பிரிக்ஸ் செஸ் – உலகச் சாம்பியனை வீழ்த்திய இந்தியாவின் ஹரிகா!

ஜெனிவா: கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில், உலகச் சாம்பியனும் சீனாவைச் சேர்ந்தவருமான ஜு வென்ஜனை வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் ஹரிகா.

சுவிட்சர்லாந்து நாட்டில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றவாது சுற்றில், தரநிலையில் 3வது இடத்திலுள்ள சீனாவின் ஜு வென்ஜனை எதிர்கொண்டார் தரநிலையில் 9வது இடத்திலுள்ள இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி.

இப்போட்டியில் வெள்ளைநிறக் காய்களை வைத்து விளையாடினார். போட்டியின் 54வது நகர்த்தலில், வெற்றி ஹரிகாவின் வசமானது.

இதுவரையான போட்டிகளில் 2 டிரா மற்றும் 1 வெற்றியுடன், 2 புள்ளிகள் பெற்று, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு வீராங்கனைகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஹரிகா.