சென்னை: மொத்தம் 6 நட்சத்திரங்கள் பங்கேற்ற ஷார்ஜா ஆன்லைன் செஸ் தொடரில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணாவுக்கு 2வது இடம் கிடைத்தது.

கொரோனா காரணமாக சர்வதேச செஸ் தொடர்கள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. ஷார்ஜா ஆன்லைன் செஸ் தொடரும் இந்த வகையில் நடத்தப்பட்டது.

இத்தொடரில், இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, அஜர்பைஜான் நாட்டின் மாமேத்யரோவ் உள்ளிட்ட மொத்தம் 6 நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியின் பத்தாவது மற்றும் இறுதிச்சுற்றில், போலந்தின் ராடோஸ்லாவிடம் மோதிய ஹரிகிருஷ்ணா தோல்விடையந்தாலும், அவர் பெற்ற மொத்த புள்ளிகள்(6.5) அடிப்படையில் இரண்டாவது இடம் கிடைத்தது.

இதன்மூலம் இவர்களுக்கு ரூ.1.70 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. அஜர்பைஜான் நாட்டின் ஷாக்ரியார் மொத்தம் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு வழங்கப்பட்ட  பரிசுத்தொகை ரூ.2.27 லட்சம்.