விஷன் 3 குளோபல் தயாரிப்பில் சர்வதேச விருதுகளை வென்ற தமிழ்ப் படம் ‘ரேடியோ பெட்டி’. இதன் இயக்குநர் ஹரி விஸ்வநாத் தற்போது சத்தமின்றி இந்தியில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
‘பன்சூரி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் ரிதுபர்னா சென்குப்தா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அங்கன் மாலிக், உபேந்திர லிமாயி, மசூத் அக்தர், டேனிஷ் ஹுசைன், மேஹெர் மிஸ்திரி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு போலந்து நாட்டைச் சேர்ந்த ஸெகொர்ஸ் ஹார்ட்ஃபீல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜெயஸ்ரீ லட்சுமி நாராயண் தயாரிப்பு வடிவமைப்பைச் செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். தெப்ஜ்யோதி மிஸ்ரா இசையமைக்க, தபஸ் நாயக் ஒலி வடிவமைப்புப் பணிகளையும், அனுபம் பேனர்ஜி பாடல் வரிகளையும் எழுதியுள்ளனர்.