பிரியா பவானி சங்கர் மீது ஹரிஷ் கல்யாண் காதல்….?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.இவருக்கு பெண் ரசிகர்கள் அதிக அளவில் உருவானார்கள்.

இந்நிலையில், இவர் தற்போது நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்து பிரியா பவானி சங்கர் ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல… நான் தான் முதலில் சொல்ல நினைத்தேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு ஹரிஷ் கல்யாண், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இன்று மாலை 5 மணிக்கு, அவர்கள் காதலிக்கிறார்களா அல்லது படத்தின் ப்ரொமோஷனுக்காக இப்படி செய்தார்களா என்பது தெரியவரும்.