ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரின் ‘ஓ மணப்பெண்ணே’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!

கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடித்த பெல்லி சூப்புலு படம் தற்போது ரீமேக் செய்துள்ளார் கார்த்திக் சுந்தர்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் உதவியாளராக இருந்தவர் கார்த்திக். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர் .
படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் தேவரகொண்டா மற்றும் தருண் பாஸ்கர் வெளியிட்டுள்ளனர் .

முன்னதாக ஹரிஷ் கல்யாண் தான் ப்ரியா பவானி சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஒரு வழியாக எங்களுக்காக சந்தோஷப்படுகிறேன். #HarishHeartsPriya
#LoveIsInTheAir என்று ட்வீட் செய்தார்.

அது ஹரிஷ் கல்யாண் ப்ரியா பவானி சங்கரை காதலிப்பதாக ட்வீட்டியுள்ளார் என்று பேச்சு கிளம்பிவிட்டது. அனால் அது இதற்கு தானாம் .