ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏற்கனவே கடந்த மாதம் 10 நக்சலைட் டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் போன்ற வடகிழக்கு மாநிலங்களில், பெரும்பாலான பகுதிகளில்  நக்சலைட்டுக்களின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நக்சலைகளை ஒழிக்கும் பணியில் மத்திய ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்ண்ட் மாநில முதல்வர் ரகுபார் தாஸ்,லடிஹர் மாவட்டத்தின்  பெட்லா வனப்பகுதியில் புத்ராபார் எல்லை தொடர்பான மதிப்பாய்வு கூட்டத்தில் வர இருந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ஜார்கண்ட்  மாநிலம், லடிஹர் மாவட்டத்தின்  பெட்லா பகுதியில்  நக்சலைட்டுகள் முகாமிட்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, மாநிலபோலீசாரும், பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

இதையறிந்த நக்சலைட்டுகள் அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சி செய்து, பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில்,5 நக்சலைட்டுகள் சுட்டுகொல்லப்பட்டனர். மற்ற நக்சல்களையும் தேடி வருகின்றனர்.

முதல்வர் வர உள்ள நிலையில் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.