இரண்டு வயதிலேயே கணவரை சந்தித்த பிக் பாஸ் ஆர்த்தி….!

--

திரைப்படங்கள், டிவி ரியாலிட்டி ஷோக்கள் உட்பட பலவற்றிலும் காமெடி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி.

ஆர்த்தி கடந்த 2009இல் காமெடி நடிகர் கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஆர்த்தி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் தான் 2 வயது இருக்கும் போது கணேஷை பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

“இது பேபி ஆர்த்தி மற்றும் மாஸ்டர் கணேஷ் இணைந்து நடித்த முதல் படம். கடவுள் தான் எனக்கு இரண்டு வயது இருக்கும் போது என் கணவரை சந்திக்க வைத்துள்ளார். கிரேட் ஸ்ரீவித்யா அம்மா உடன் நினைவுகள்” என ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.