அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் காலமானார்

அரூர்:

ரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம் உடல்நலக் குறைவு காரணமாக  காலமானார். இவர் அதிமுகவை சேர்ந்தவர்.

தர்மபுரி மாவட்டத்தில்  உள்ள அரூர் தொகுதியில், 1984ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை  சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜமாணிக்கம்.  எம்ஜிஆர் ஆட்சியின்போது  சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜமாணிக்கம்.   அதிமுகவை சேர்ந்தவரான இவர் வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 76.

தற்போதைய அரூர் தொகுதி  எம்எல்ஏ முருகன், ராஜமாணிக்கத்தின் மகன். டிடிவி ஆதரவாளராக அமமுகவில் இருக்கிறார். இதன் காரணமாக  சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்த அரூர் தொகுதி காலியாக உள்ளது.