புனே:

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என்று கூறி கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சுதா பரத்வாஜை ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது.


பரத்வாஜ் சத்தீஷ்கரில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகிறார். வழக்கறிஞர், தொழிற்சங்கவாதி, சமூக ஆர்வலர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்.

மகாராஷ்ட்டிர மாநிலம் பிமா கோரேகாவில் வன்முறை நடப்பதற்கு முன்பு பொதுக்கூட்டம் நடத்தி,வன்முறை உருவாக காரணமாக இருந்ததாகவும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு நிதி திரட்டி கொடுத்ததாகவும் சுதா பரத்வாஜ் மீது  போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், அவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடந்த விழாவில் சுதா பரத்வாஜ் உட்பட 21 பேரை ஹார்வர்டு சட்ட பல்கலைக்கழகம் கவுரவித்தது.

தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சுமா பரத்வாஜ் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மார்ச் 11-ம் தேதி அளிக்கவுள்ளது.