ஹார்வர்ட் பல்கலைக்கழக கல்லூரி டீன் ஆகும் இந்தியர் ஸ்ரீகாந்த் தத்தார்

மாசசூசெட்ஸ்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வணிக கல்லூரியில் டீன் ஆக ஸ்ரீகாந்த் தத்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஹார்ட்வர்ட் வணிகக் கல்லூரி 112 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

இங்கு தற்போது நிதின் நோரியா என்பவர் டீன் ஆகப் பணி புரிந்து வருகிறார்.

இவர் வரும் டிசம்பர் மாதம்  ஓய்வு பெற உள்ளார்.

அடுத்த டீன் ஆக இந்திய வம்சாவளியினரான ஸ்ரீகாந்த் தத்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த் தத்தார் இங்கு சுமார் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இவர் இந்த கல்லூரியின் 11 ஆம் டீன் ஆவார்.

வரும் ஜனவரி முதல் ஸ்ரீகாந்த் தத்தார் பொறுப்பேற்கிறார்.

இவர் இங்கு பேராசிரியர், மற்றும் டீனுக்கு இணையான பதவிகளை வகித்துள்ளார்.