மன்ஹாட்டன்: பாலியல் பலாத்கார வழக்கில், பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் புகார் கூறப்பட்டது. ஏஞ்சலினா ஜூலி  உள்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பாலியல் வழக்கில் அவரை மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளியாக  தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அவர் அடைக்கப்பட்டார். இந் நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சக்கர நாற்காலியில் அவர் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது.