ஹரியானா: பனி மூட்டத்தால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 8 பேர் பலி!

ஹரியானாவில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஏழுப்பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர்.

accident

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைகளேஎ தெரியாதபடி அளவுக்கு மீறி பனிப்பொழிவதால் விமானம், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ரோக்தாக்-ரிவாரி நெடுஞ்சாலையில் உள்ள ஜாகர் மேம்பாலம் பனிப்பொழிவினால் முழுவதும் மூடப்பட்டு, பொக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேம்பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் எதிரெதிர் திசையில் வந்த இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அதனை தொடர்ந்து பின்னால் வந்த அடுத்தடுத்த 50 வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்டன.

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் 6 பேர் பெண்கள். இதனால் அப்பகுதியில் 2கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.