ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா

ஹரியாணா:
ரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

நான் இன்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதன் முடிவில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக கடுமையாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.