பாஜக முதல்வரின் பலாத்கார ஆதரவுப் பேச்சினால் பரபரப்பு

--

சண்டிகர்

பாஜக ஆளும் ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் பலாத்கார குற்றங்கள் எப்போதும் உள்ளவையே என கூறி உள்ளார்

நாடெங்கும் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை ஒட்டி மத்திய பாஜக அரசு பலாத்கார குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும்படி சட்டத்தை மாற்றி வருகிறது. அது மட்டுமின்றி #மீடூ விவகாரத்தினால் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கி வருகின்றனர்.

பாஜக ஆட்சி செய்யும் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். இவர் சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசி உள்ளார். அந்த பேச்சு அடங்கிய வீடியோ வெளியாகி நாட்டு மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பொதுக் கூட்டத்தில் மனோகர் லால் கட்டார், “பலாத்கார நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் அந்நிகழ்வுகள் வெகுவாக குறைந்துள்ளன. பலாத்காரம் என்பது பல காலங்களாக நடந்து வருவதுதன். அத்தைகைய குற்றங்கள் நீண்ட நெடுங்காலமாக உள்ளவைகள் என்பதால் இப்போதும் தொடர்கின்றன.

பலாத்கார குற்றங்கள் 80-90% வரை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் நிகழ்வதால் அவை பெரும்பாலும் வெளி வருவதில்லை. அது மட்டுமின்றி பல நேரங்களில் இருவரும் ஒத்துப் போய் இந்த குற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் இருவருக்கும் இடையில் வேறு ஏதும் மனக்கசப்பு ஏற்படும் போது இவை வெளியில் சொல்லப்படுகின்றன. ஆகவே இவைகளை பலாத்காரம் எனவே சொல்ல முடியாது” என பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.