அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பரிதாபாத்:

ரியானா மாநில காங்கிரஸ் தலைவர்  மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆட்சி  செய்து வரும் அரியானா மாநிலத்தில் முதல்வராக  மனோகர் லால் கட்டார் பதவி வகித்து வருகிறார். அங்கு காங்கிரஸ் கட்சியின்  செய்தி தொடர்பாளராக இருப்பவர் விகாஸ் சவுத்திரி.

இவர் இன்று காலை பரிதாபாத்  நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு, காரில் ஏறியபோது, மறறொரு காரில் மறைந்திருந்த மர்ம  நபர்கள்  விகாஸ் சவுத்திரி மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சவுத்திரியை அவரது உதவியாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடடினயாக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே  அவரது உயிர் பிரிந்து விட்டது. இதை மருத்துவர்களும் உறுதிபடுத்தினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  சவுத்திரியை மர்ம நபர்கள் துப்பாக்கி யால் சுடும் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதைக்கொண்டு கொலையாளிகளை பிடிக்கும் பணியில் காவல்துறை முடுக்கி விடப்பட்டு உள்ளது.