அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா: தொடர்பில் இருந்தவர்கள் தனித்திருக்க அறிவுறுத்தல்

சண்டிகார்: அரியானாவில் கல்வி அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், அரியானாவில் கல்வித்துறை அமைச்சர் கன்வர் பாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: நான் கொரோனா சோதனை செய்து கொண்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே என்னை தொடர்பு கொண்டவர்கள், தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கன்வர் பால் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.