முதல்வர் மனோகர் லால் கட்டா

ரியானாவில் வாழும் வெளிநாட்டவர்கள் மட்டும் மாட்டுக்கறி சாப்பிட அனுமதி வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மாட்டுக்கறி சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஹரியானா முதலமைச்சர் மனோகர் கட்டா எச்சரித்தார்.

இது அப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானதும், இவ்வாறு நான் கூறவில்லை, ஊடகங்கள்தான் திரித்துகூறி விட்டன என்று அவர் விளக்கமளித்தார்.

ஆனால் அவர் பேசிய ஆடியோவை ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மனோகர் கட்டா,

இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கு சிலவசதிகளை நாம் செய்துதரவேண்டும்.  நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கை முறையை கடைபிடித்து வருவதாக கூறிய அவர், வெளிநாட்டவர்கள் குடிக்கும் விசயத்திலோ, சாப்பிடும் விசயத்திலோ தலையிடக்கூடாது என்றார்.

அதனால் ஹரியானாவில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் மாட்டுக்கறி சாப்பிட சிறப்பு அனுமதி வழங்க முடிவெடுத்திருப்பதாக முதலமைச்சர் மனோகர் கட்டா தெரிவித்தார்.