Random image

வேலையில்லாத இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்…..பாஜக பெண் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

சண்டிகர்:

வேலைவாய்ப்பு இல்லாத வாலிபர்கள் பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபவதாக பாஜக பெண் எம்எல்ஏ கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் சிபிஎஸ்சி தேர்தவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி 12 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ஹரியானா மாநில பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பிரேமலதாவிடம் கூறுகையில்,‘‘ நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத மன அழுத்தத்தில் இருக்கும் வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள மாணவியை எஸ்.பி. நஷ்னீன் பாசின் இன்று சந்தித்தார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ராணுவ வீரர் உள்பட 3 பேரில் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மனிஷ், நிசு, ராணுவ வீரர் பன்கஜ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்படுதத்ப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.