கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய இளம்பெண் சாதனை….மோடி வாழ்த்து

டில்லி:

கிளிமாஞ்சாரோ எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இந்தியாவின் இளம்பெண் சிவாங்கி பதக் சாதனை படைத்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசார் நகரை சேர்ந்தவர் சிவாங்கி பதக் (வயது 17). மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர் 3 நாட்களில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்திய இளம்பெண் என்ற சாதனை படைத்தார்.

தொடர்ந்து ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் ஏறியுள்ளார். 5,895 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் ஜூலை 21-ம் தேதி ஏறத் தொடங்கினார். 24-ம் தேதி மலை சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார். இளம்வயதில் கிளிக்மாஞ்சாரோ சிகரத்தை தொட்ட இவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிவாங்கி பதக் கூறுகையில்,‘‘ சிறு வயதில் இருந்தே சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது மலையேற்ற பயிற்சிக்கு பெற்றோர் ஆதரவு அளித்தனர். மலையேறுவது மிகவும் ஆபத்தானது என்பதால் பெற்றோர் அஞ்சினர். எனினும் முறையான பயிற்சியை மேற்கொண்டேன். பயிற்சியாளர், நண்பர்கள் உற்சாகம் ஏற்படுத்தினர். இதன் காரணமாக சாதிக்க முடிந்தது’’ என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Haryana girl has scaled Africa's highest peak Mount Kilimanjaro in three days pm modi greets, கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய இளம்பெண் சாதனை....மோடி வாழ்த்து
-=-