குழந்தை பிறக்கும் முன் பாலினத்தை அறிவிப்பதில் அரியானா முதலிடம்

--

டில்லி

குழந்தை கருவில் உள்ளபோதே அதன் பாலினத்தை கண்டறிந்து தெரிவிக்கும் குற்றத்தில் அரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

கருவில் உள்ள குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என முன்பே கண்டறிந்து பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் வழக்கம் இருந்தது.   அதனால் இந்திய அரசு ஒரு சட்டம் இயற்றியது.   அதன்படி பாலினத்தை முன் கூட்டியே கண்டறிந்து சொல்வது சட்டப்படி குற்றமாகும்.  இவ்வாறு தெரிவிக்கும் ஸ்கேன் செண்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் வரை  இது போல முன் கூட்டியே பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் செண்டர்கள் குறித்து நாடெங்கும் 449 குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.   இதில் அரியானா மாநிலத்தில் மட்டும் 158 குற்றச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.  அடுத்த படியாக ராஜஸ்தான் மாநிலத்தில் 112 வழக்குகள் பதிவாகிஉள்ளன.

கடந்த ஆண்டு அரியானா மாநிலத்தில் 388 குற்றங்கள் மட்டுமே பதிவாகி இருந்தன.   ஆனால் இந்த வருடம் சுமார் 15% அதிகரித்துள்ளன.   மத்திய சுகாதாரத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இருந்து இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.