Random image

ஹரியானாவில் அதிர்ச்சி…..காவல் நிலையத்திலேயே பெண் எஸ்ஐ கூட்டு பலாத்காரம்

சண்டிகர்:

ஹரியானா காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வகையில் ஹரியானாவில் அதிர்ச்சியூட்டும் வகையில் பெண் சப் இன்ஸ்பெக்டரை காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள பலாவால் காவல் நிலையத்தில் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

நெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஹரியானாவில் அதிகரித்து வருகிறது. கடந்த மே 31ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் 70 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் 1,238 பாலியல் பலாத்கார வழக்குகளும், 141 பலாத்கார முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,036 பருவ குற்ற வழக்குகளும், 285 ஈவ் டீசிங், 2,432 கடத்தல், 3,010 வரதட்சனை கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடப்பதாக காவல்துறை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.