சண்டிகர்:

ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் பூசாரி பயற்சி பங்கேற்க வேண்டும் என ஆளும் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் யமுனா நகர் கோவில் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது. இந்த விழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், பூஜைகள் நடத்தவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாமை மாநில அரசு நடத்துகிறது. இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். புறக்கணிக்கு ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எங்களது பணி பயிற்றுவிப்பது மட்டுமே. மத ரீதியிலான பணிகளில் எங்களை ஈடுபடுத்த கூடாது என்று ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எதிர்கட்சிகளும் மாநில முதல்வர் கத்தாரை விமர்சனம் செய்துள்ளன. கல்வியில் மதத்தை திணிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்த கல்வி வளர்ச்சியை பாதிக்கும். மாணவர்களின் நலன் பாதிக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளன.

ஆனால், திருவிழாவில் பக்தர்களுக்கு இனிப்பு வழங்க உதவி செய்ய மட்டுமே ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவர்களுக்கு எவ்விதமான பயிற்சிகளும் அளிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா அரசு இது போல் சர்ச்ச¬யில் சிக்குவது முதன்முறையல்ல. ஏற்கனவே குருகிராம் பகுதியில் புதிதாக இறைச்சி கடைகள் தொடங்கி உரிமம் வழங்கப்பாடது என்று உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.