ஜெயலலிதா மின்சார நெருக்கடியைத் உண்மையில் தீர்த்து விட்டாரா ?

கடந்த சில ஆண்டுகளாய் நிலவி வந்த மின் நெருக்கடி, கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலைகளை  மிகுந்த பரிதாபமான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது .

 

சென்னைவாசிகள் மீண்டும் மின் தடைகளின் வெப்பத்தை உணரத் jaya power crisisதொடங்கியுள்ளனர்.
குறிப்பாக ஞாயிறன்று மாலை  கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, சவுகார்பேட்டை, சூளைமேடு , பிராட்வே மற்றும் பார்க் டவுன் உட்பட வட சென்னை பல பகுதிகளில், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.0
ஒழுங்கற்ற மின்சார வெட்டு இப்போது  மீண்டும் வழக்கமாகி விட்டது.
டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அதிகாரிகள், மின் கேபிள்கள் அதிக வெப்பமடைவதை மின் வெட்டுக்கான காரணமாக கூறுகின்றனர். அதிக சுமை காரணமாக மின்மாற்றிகளும் அவ்வப்போது சிக்கல்களை சந்தித்து வருவது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த கோடையில், குளிர்விப்பான்கள் மற்றும் குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரிப்பதும் வழக்கமாக உள்ளத இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஞாயிறன்று கோயம்புத்தூரில் தான் மேற்கொண்ட பிரச்சாரத்தில் தம்முடைய ஆட்சி மின் நெருக்கடி தீர்த்து விட்டது என்று அறிவித்தார்.
“கடந்த ஆண்டு, அரசு 7.485 மெகாவாட் மின்சாரம் பெற்றுள்ளது. எனவே கடந்த ஜூன் முதல், மாநிலத்தில் மின் வெட்டே இல்லை ” என்று அவர் அறிவித்தார்.
கடந்த 2014- பாராளுமன்ற தேர்தலின் போது பாளையங்கோட்டை பேரணியில் ” மின்மாற்றி சிக்கல்களை எதிர்கட்சிகள் சதித்திட்டமிட்டு ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.

மின்சார பற்றாக்குறைக்கு திமுக அதிமுக ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றம் சாட்டிக் கொள்கின்றன. இரண்டு திராவிடக் கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக கடந்த  நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகின்றன.
ஆனால் ஜெயலலிதாவின் கூற்று உண்மையா?
இது குறித்து தமிழக மின்சக்தி பொறியாளர்கள் சொசைட்டியின்  எஸ். காந்தி கூறுகையில் “மின் பற்றாக்குறையை சரிகட்ட அதிமுக அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி நெருக்கடி தீர்க்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளது துரதிஸ்டவசமானது. ,
அவர் பொதுத்துறை நிறுவனமத்தின் சிவப்பு நாடாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் நடவடிக்கையாக இந்த செய்தார் என நம்புகின்றேன்.”  என்கிறார் .
2014ல் , ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதில் தமிழக மின் பற்றாக்குறைக்கு மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மூலம் குறைந்த மின் உற்பத்தி செய்யப்படுவதே முதன்மையாக காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதில், என்டிபிசியுடன் கூட்டுத் சேர்க்கப்பட்டுள்ள திட்டம் , மற்றும் பிஹெச்இஎல் இன்னும் டான்செட்கோவிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள புதிய அனல் மின் உற்பத்தி  திட்டங்களும் அடங்கும்.
ஆனால் மின்சாரத்தை தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்வது பிரச்சனையைத் தீர்த்து விடுமா?
மின்சக்தியின் விலை பல மடங்கு உயரப் போகின்றது. மற்றும் நுகர்வோர் ம் இன்சாரக் கட்டணம் அதிகரிக்கப் போகின்றது.  தேசிய மின் கட்டம் எனப்படும் Grid அதை கையாளும் திறன் பெற்றுள்ளதா என்பதும் நமக்குத் தெரியாது.
“2014 ஆம் ஆண்டில், தேசிய மின் கட்டம் உடன் தெற்கு மின் கட்டம் ஒற்றை இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றை இணைப்பு ( 2,500 மெகாவாட் திறன் கொண்டது என்பது ஏட்டளவில் மட்டுமே சாத்தியம்) மட்டும் 800 மெகாவாட் ஏற்றிச் செல்லும் திறனை மட்டுமே கொண்டுள்ளது, எனவே, மின் சக்தி800 மெகாவாட்க்கு மேல் பாயும்போது இந்த மின் கட்டம் கண்டிப்பாக செயலிழக்கும்.  மின்நிலையத்தில் இந்த சுமையைக் கையாள போதுமானஉள்கட்டமைப்பு வசதியும் இல்லை. இது அடுத்து வரும் அரசாங்கதிற்கு பெறும் சுமையாகும் . அரசாங்கத்திற்கு மிகப்பெரும்  சவால் காத்திருக்கின்றது. மேலும் தமிழ்நாடு மின்வாரியம் 74,000 கோடி ரூபாய் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூரின் உண்மை நிலைமை என்ன?
மார்ச் 2015உடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதன் மின்சக்தி நுகர்வு இந்த மார்ச் மாதம் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மின்சாரத்தின் ஒட்டுமொத்த நுகர்வு 10 சதவீதம் விரிவாக்கம் கூறுகிறது. கோயம்புத்தூர் நகரில் 5.3 மில்லியன் மக்களுக்கு வேலை கொடுக்கும் 760.000 பதிவு செய்யப்பட்ட குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாய் நிலவி வரும் மின்வெட்டால் இந்த நிறுவனங்கள் தள்ளாடி வருகின்றன. “நமது மின்சாரக் கட்டணத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
குறு நிறுவனங்களில் மின் கட்டண அலகுகள் வழங்கல் பிரிவு 3Bயின் கீழ் உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், மின் கட்டணம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் எஸ் ரவி குமார் கூறுகையில், அரசினால் இந்தக் கட்டணத்தை குறைக்க முடியவில்லை என்றால், தயவு செய்து 3A1 கீழ் மைக்ரோ நிறுவனங்களை வைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.  இது மின் கட்டண செலவைக் குறைக்க உதவும் எனக் கூறுகிறார்.
மின்வெட்டால் ஏற்கனவே உற்பத்தி பெரிதும் பாதிக்கப் பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 20,000 சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டபடியால் மின் பயன்பாடு பல அலகுகள் குறைந்துள்ளது.
4,000 உறுப்பினர்கள் உள்ள தமிழ்நாடு குடிசை மற்றும் மைக்ரோ தொழில்கள் சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் ஜே ஜேம்ஸ் கூறுகையில், ” 2011-2013 இருந்து நிலைமை மோசமடைந்து வருவதால் பல கடைகள் மூடப்பட்டது . கடைகளுக்கு கிடைத்து வந்த ஆர்டர்கள் பெரிய அளவில் திருப்பி விடப்பட்டு பின்னாளில் முழுவதுமாய் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆதலால் மின் சக்தி பயன்பாடு இயற்கையாகவே 2015-ல் குறைந்துவிட்டது” என்றார்.
2012 முதல், இந்த நிறுவனங்கள் மூடப்பட்ட பிறகு, இரவு 10 மணியலவில், மின் நுகர்வு அளவு மிகவும் வெகுவாக குறைந்து கூறப்படுகிறது.

“ஏனெனில் 2011-2014 இடையே 12 மணி நேரத்திற்கு மேல் மின் வெட்டு நீடித்ததால் பல பணி உத்தரவுகள் வடக்கே திருப்பி விடப்பட்டது. 2014 ஆம் ஆண்டில், மின் பயன்பாடு பெரும்பாலும் சகஜ நிலைக்கு திரும்பினாலும், சிறு நிறுவனங்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து விட்டது.
எனவே எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்று கணிக்க முடியவில்லை. நம்பிக்கையின்றி எங்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

தனியார் துறையில் இருந்து மின்சாரம் வாங்குவது பெரும்பாலும் அதிமுக தன் முகத்தைக் காப்பாற்றும் நடவடிக்கை மட்டுமே.
அரசு 2015-ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு 4,000 மெகாவாட் அனல் ஆலை அமைப்பதற்கும், இதே மாவட்டத்தில் உப்பூர் எனும் கிராமப்புற தொகுதியில் ஒரு 1600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க TANGEDCO முடிவு செய்துள்ளது.


பலரும் ஜெயலலிதா மின் பற்றாக்குறையை சரிகட்டி விட்டதாக கூறினாலும் , மின் பற்றாக்குறை மற்றும் கட்டண அதிகரிப்பு ஆகிய விளைவுகளை நுகர்வோர் மற்றும் தொழில்சாலைகளை துயருரவேச் செய்யும் என்பது தான் நித₹அனமான உண்மை.