சென்னை:
திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், திமுகவும் காங்கிரசும் நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியைத் தொடர்ந்திருக்கிறோம் என்றும், தற்போதும் தொடர்கிறது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், வேளாண் சீர்திருத்த சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்க தயார் என மத்திய அரசு கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு தான் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆவர், வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கின்றது. விலைவாசி, பணவீக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது. இந்த விலை உயர்வை, மத்திய அரசும், மாநில அரசும் கட்டுப்படுத்த முன்வரவில்லை. குறிப்பாக, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசு தயாராக இல்லை. தமிழக அரசு, மத்திய அரசிடம் அடிபணிந்து செல்லும் நிலையில்தான் இருக்கின்றது. மேலும், மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கின்றது. ஆகவே, ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்