சியோல்: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், சீனாவிலிருந்து வடகொரியாவிற்கு நுழைபவர்களை சுட்டுத் தள்ளுமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ள. அங்கே, அதிபர் கிம் ஜாங் உன் குறித்த மர்மங்களே முடிவில்லாமல் சென்றுகொண்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஜனவரி முதலே, கொரோனா காரணமாக, சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவசர நிலையை வடகொரியா அமல்படுத்தியது எனவும், அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ளுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.