மூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்!: நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் மீது மூன்று வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக புகார் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகர் புரிகாஷ்ராஜ். சமீப காலமாக  அரசியல் குறித்தும் அதிரடியாக பல கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில்  ஜெகன்குமார் என்பவர்  பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளார். அவர் தனது புகாரில், பிரகாஷ்ராஜிடம் சட்டத்துக்குப் புறம்பாக மூன்று தேர்தல் அடையாள அட்டைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  மூன்றிலும் வெவ்வேறு முகவரிகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் ஜெகன்குமார் புகார் தெரிவித்துள்ளார் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிரடியாக அரசியல் கருத்துக்களைக் கூறிவரும் நடிகர் பிரகாஷ்ராஜ் மீதான இந்தப்புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

#three # voterID  #Complaint #against #actor #PrakashRaj