அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார்.

124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் ஹஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்காக 44 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார் ஆம்லா. கடைசியாக உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஆடினார் ஆம்லா. 124 டெஸ்ட் போட்டிகளில் 215 இன்னிங்ஸ்களில் 9,282 ரன்களை குவித்த ஹஷிம் ஆம்லாவின் டெஸ்ட் சராசரி, 49.97 ஆகும். 28 சதங்களையும், 4 இரட்டைச் சதங்களையும் எடுத்த அபார வீரர் ஆவார் ஹஷிம் ஆம்லா.

ஒருநாள் போட்டிகளிலும் பல சாதனைகளில் முன்னிலை பெற்றிருந்த ஹஷிம் ஆம்லா மொத்தம் 8,113 ரன்களை 27 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் விளாசியுள்ளார்.
டேல் ஸ்டெய்ன் சமீபமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற தற்போது ஆம்லா அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மசான்சி சூப்பர் லீகிலும் தொடர்ந்து ஆடுவதாகத் தெரிவித்துள்ளார்.

சுமார் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வை 2004ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கினார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அறிமுகப் போட்டியில் முறையே 2008 மற்றும் 2009ம் ஆண்டு தான் ஆடினார் ஆம்லா.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆம்லா அறிவித்த அவர், “அனைவருக்கும் நன்றி, எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி” என்று கூறி, தனது ஓய்வு அறிவிப்பையும் வெளியிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published.