கடந்த புதன்கிழமை அன்று, அகர்தலாவில்,  பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளப் பிரதமர் ஷேக் ஹசினாவும் ஒரு சர்வதேச இணைய நுழைவாயில் திறந்து வைத்தனர்.
hasina modi
மும்பை மற்றும் சென்னையை அடுத்து இதுதான் நாட்டின் மூன்றாவது சர்வதேச இணைய நுழைவாயிலாகும்.
இரண்டு தலைவர்களும் தமது நாடுகளுக்குக்கிடையே மின்சாரப் பரிமாற்றத் திட்டம் ஒன்றையும் திறந்துவைத்தனர். இதில் திரிபுராவிலுள்ள பலடானா ஆலை வங்காளத்திற்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்கும்.
modi1
புதன்கிழமை காலை இத்திட்டங்கள் முறையாக திறக்கப்படும் முன் அகர்தலாவிலுள்ள திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் அவர்களும் புது தில்லியில் மோடி அவர்களும் டாக்காவில் ஹசினா அவர்களும் காணொளி காட்சி வழியாக இணைக்கப்பட்டனர்.
 
அண்டை நாட்டிலிலுள்ள காக்ஸ் பஜாரிலிருந்து இருந்து 10 ஜிபி இணைய அலைவரிசையை இந்தியா இறக்குமதி செய்யும்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் வங்காளம் நீர்மூழ்கி கேபிள் கம்பெனி லிமிடெட் (BSCCL) இரண்டும் இணைந்து இந்த இணைய நுழைவாயில் உருவாக்கி ஜனவரியில் அகர்தலாவிலுள்ள அகௌரா செக்போஸ்டில் 10 ஜிபி அலைவரிசையை இணைத்தது.
hasina modi2
மோடி மின்சக்தி ஏற்றுமதி ஒரு ஒப்பந்தமில்லை ஆனால் அண்டை நாட்டுடன் நட்பை  வலுப்படுத்தம் ஒரு முயற்சி என்று மோடி கூறினார். நாட்டின் மூன்றாவது இணைய நுழைவாயில் திறப்பு, மத்தியின் கிழக்கு கொள்கை சட்டம் மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு மைல்கல்லாக இருந்தது, என்றும் அவர் கூறினார்.
“நமது ஒத்துழைப்பை விண்வெளி அறிவியலுக்குக் கொடுத்து பங்கபந்து என்ற செயற்கைக்கோளை நமது கூட்டு ஒத்துழைப்பு மூலம் விண்வெளியில் செலுத்த உதவுவோம் என இந்த ஹோலி நன்நாளில் வாக்குறுதி தருகிறன்,” என்று அவர் கூறினார்.
“இரு நாடுகளுக்குமிடையேயான டிஜிட்டல் இணைப்பை இது அதிகரிக்கும்; ஒன்றை ஒன்று சார்ந்துள்ள இவ்வுலகில்,  எல்லாப் பிரிவிற்குமான வளர்ச்சிக்குப் பிராந்திய ஒத்துழைப்பு என்பது தேவை”, என்று ஹசினா கூறினார். மேலும்,1320 மெகா வாட் மின் நிலையம் ஒன்று இந்திய ஒத்துழைப்பினால் வங்காளத்தில் கட்டப்பட்டு வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் பல திட்டங்கள் வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.
 
திரிபுரா முதல்வர்  சர்க்கார் அவர்களும், இந்தியா மற்றும் வங்காளத்திற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் செயல்படும் மோடி அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இதைப் பற்றி அவர் கூறுகையில், “இது தெற்காசிய ஒருங்கிணைப்பிற்கு பெரிய வாய்ப்பாகவும் இரண்டு நாடுகளுக்குள்ளான நட்பு மேம்பாட்டில் மற்றொரு மைல்கல்லாகவும் அமைகிறது.”