மத்திய நிதித்துறை செயலாளராக ஹஸ்முக் ஆதியா நியமனம்!!

டில்லி:

மத்திய நிதித்துறை செயலராக வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதித்துறை செயலராக இருந்த அசோக் லவாசா ஒய்வு பெற்றார். அந்த பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் வருவாய்த்துறை செயலாளராக உள்ள ஹஸ்முக் ஆதியாவை நிதித்துறை செயலாளராக நியமித்து மத்திய நிதித்துறை மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவு பிறபித்தது.

புதிய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியின் கீழ் 5 துறைகள் உள்ளன. மத்திய அரசின் நியமன கமிட்டி இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.