டில்லி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க  தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தொப்பி சின்னம் தொடர்பாக மேல்முறையீடு செய்தால் எங்களிடம் கருத்தை கேட்க வேண்டும் ஓ.பி.எஸ் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக களமிறக்கும் டிடிவி தினகரன், தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தொப்பி சின்னம் வேண்டும் என்று வேறு சில சுயேச்சைகளும் கோரிக்கை விடுத்துள்ளதால், குலுக்கல் முறையில் தான் ஒதுக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில்ர,  டில்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் கடந்த 1ந்தேதி  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, டிடிவி தினகரன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தொப்பி சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து டிடிவி தரப்பில் டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடரப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ் சார்பாக, டில்லி ஐகோர்ட்டில், தொப்பி சின்னம் தொடர்பான வழக்கு தொடரப்பட்டால், எங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.