டெல்லி: ஹத்ராஸ் வழக்கிவ் தடய அறிவியல் அறிக்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தெரிவித்த மருத்துவர் அஜிம் மாலிக் இனிமேல் பணியாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

டாக்டர் அஜீம் மாலிக் தவிர, மற்றொரு மருத்துவர் ஒபைத் ஹக் என்பவருக்கும் இதேபோன்ற கடிதம் மருத்துவமனை வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் ஹக் அந்த பெண்ணின் மருத்துவ, சட்ட வழக்கு அறிக்கையை சான்றளித்தார்.
தடயவியல் அறிக்கையை மேற்கோள் காட்டி, உத்தரபிரதேச ஏ.டி.ஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் செய்தியாளர் சந்திப்பில் 19 வயது தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.
பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு தடயவியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, அதே நேரத்தில் அரசு வழி காட்டுதல்கள் கண்டிப்பாக தடயவியல் சான்றுகள் சம்பவம் நடந்த 96 மணி நேரம் வரை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றன. இந்த சம்பவத்தில் கற்பழிப்பை இந்த அறிக்கையால் உறுதிப்படுத்த முடியாது என்று டாக்டர் மாலிக் கூறியிருந்தார்.
இது குறித்து அலிகார் முஸ்லீம் லீக் நிர்வாகம் கூறுகையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான எந்த மருத்துவரையும் நிர்வாகம் இடைநீக்கம் செய்யவில்லை. 2 மாதங்களுக்கு முன்பு, காலியிடங்கள் இருந்தன. அவர்களில் சிலருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது.
அவசரநிலை காரணமாக, டாக்டர் மாலிக் மற்றும் டாக்டர் ஹக் ஆகிய இரு மருத்துவர்கள் விடுப்பு காலியிடங்களை நிரப்ப மட்டுமே நியமிக்கப்பட்டனர். இப்போது விடுப்பில் இருந்தவர்கள் திரும்பி வந்துவிட்டனர், ஆகவே அவர்களின் சேவைகள் இனி தேவையில்லை.
மருத்துவர்கள் இந்த முடிவில் மகிழ்ச்சியடையவில்லை என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவர்களின் குறைகளை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று கூறி உள்ளது.