பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த பெண்ணின் தந்தைக்கு ஆட்சியர் மிரட்டல்

த்ராஸ், உத்தரப்பிரதேசம்

த்ராஸ் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நீதிபதியுமான அதிகாரி பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை பகிரங்கமாக மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு பட்டியலின பெண் நால்வரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் 16 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.  தற்போது ஹத்ராஸ் மாவட்ட நீதிபதியும் மாவட்ட ஆட்சியருமான ஐ ஏ எஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் தந்தையைப் பகிரங்கமாக மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் அதிகாரி ஊடகங்களுக்குப் பெண்ணின் தந்தை அளித்த வாக்குமூலத்தை மாற்றி அளிக்குமாறு மிரட்டுவது பதிவாகி உள்ளது.  இது குறித்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மாவட்ட நீதிபதி ஊடகங்களுக்கு அளித்த தங்களது வாக்குமூலத்தை மாற்றி அளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்