முகநூல் அதிபரை செல்வந்தர் வரிசையில் பின்னுக்கு தள்ளிய வாரன் பஃபெட்

நியூயார்க்

லக செல்வந்தர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் தற்போது முகநூல் அதிபர் மார்க்குக்கு பதிலாக ஹாத்வே அதிபர் வாரன் பஃபெட் இடம் பெற்றுள்ளார்,

வர்த்தகத் துறையில் அன்றாடம் நிகழும் மாறுதல்களைக் கொண்டு புளூம்பெர்க் உலகின் 500 செல்வந்தர்கள் வரிசையை அறிவிக்கிறது.   நியூயார்க் பங்கு வர்த்தகச் சந்தையில் ஏற்படும் மாறுதல்களைப் பொறுத்து இந்த பட்டியலில் தினமும் மாறுதல்கள் உண்டாகிறது.

அந்த வரிசையில் மூன்றாவதாக முகநூல் அதிபர் மார்க் இருந்தார்.  தற்போது ஹாத்வே நிறுவன தலைவர் வாரன் பஃபெட் மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளார்.   34 வயதாகும் மார்க் இந்த வருடம் இது வரை 880 கோடி அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டு உள்ளார்.  அத்துட்ன் 8160 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சொத்துக்கள் வைத்துள்ளார்.

மார்க்கை விட 53 வருடம் மூத்தவரான 87 வயது வாரன் இந்த வருடம் மார்க்கை விட 152.22 அமெரிக்க டாலர்கள் அதிகம் லாபம் ஈட்டி உள்ளார்.  அத்துடன் அவருடைய சொத்துக்களும் மார்க்கை விட அதிகமாகி உள்ளது.

வாரன் பஃபெட் ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்திலும்  மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.