ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் புதியதாக கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தில் பேய் விரட்டும் பூஜை நடைபெற்றது.  இந்த பூஜைக்கு மாநிலத்தை ஆட்சி செய்துவரும் வசுந்தராஜே தலைமையிலான பாஜக அரசு அளித்துள்ளது.

ராஜஸ்தானில் புதிய சட்டசபை வளாகம் கடந்த 2011ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் மயான பூமியில் கட்டப்பட்டதாகவும், அதன் காரணமாக எம்எல்ஏக்கள் பலர் அகால மரணம் அடைந்து வருவதாகவும், பலர் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு செல்வதாகவும்  கூறப்படுகிறது.

சமீபத்தில் இறந்த பா.ஜ. எம்.எல்.ஏக்கள் கீர்த்தி குமாரி மற்றும் கல்யாண் சிங் ஆகியோரின் அசாதாரணமான மரணத்துக்கு சட்டசபை கட்டிடம் மயான பூமியில் கட்டப்பட்டதே காரணம்  என்றும் அம்மாநில எம்எல்ஏக்களிடையே பீதி நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து பரிகார பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டு, மாநில அரசு அனுமதியுடன் பரிகார பூஜையை பாஜக சட்ட உறுப்பி னர்கள் மேற்கொண்டனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ராஜேந்திரன் மற்றும்  ஹபீபுர் ரஹ்மான், கல்லால் குர்ஜர் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து பிரதம மந்திரி வசுந்தரா ராஜேவுடன் விவாதித்தாகவும், சட்டசபை கட்டிடம் மயான பூமியில் கட்டப்பட்டதால்,  தீய சக்திகளை விரட்ட பூஜை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திய தாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் பேய் விரட்டும் பூஜை மற்றும் பரிகார பூஜைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக மாநிலம் ஆளும் சட்டசபையில் பேய் விரட்டும் பூஜை நடைபெற்றது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.