ஹாங்காங்கில் சலுகை விலையில் கிடைக்கும் பேய் வீடுகள்

புதுடெல்லி:

ஹாங்காங்கில் பேய் வீடுகள் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், 65% விலையை மட்டும் கட்டுமான நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன.


ஆசியாவிலேயே பெரும்பாலும் மேற்கத்தியமயான நகரம் ஹாங்காங். இங்கு வீடுகள் விலை அதிகம்தான். பேய் வீடுகள் என்று கூறி உள்ளூர் மக்கள் பல வீடுகளை வாங்குவதில்லை.

பேய் வீடுகளை 65% விலையிலேயே விற்பதாக பல நிறுவனங்கள் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

ஹாங்காங்கில் இயற்கையாக இறந்தவர்கள் வாழ்ந்த வீட்டையும் பேய் வீடு என்றே பார்க்கிறார்கள்.
தற்கொலை,கொலை, விபத்தில் இறந்தவர்கள் வசித்த வீடுகளுக்கு 10% முதல் 20% வரை சில நிறுவனங்கள் தள்ளுபடி வழங்குகின்றன.

பேய் வீடுகளை வாங்க உள்ளூர் மக்கள் தயங்குகின்றனர். அதேசமயம் குறைந்த விலை என்பதால், வீடுகளை வாங்க வெளிநாட்டினர் ஓரளவு கவனம் செலுத்துகின்றனர்.

சீன-அமெரிக்க வர்த்தகப் பதற்றத்தையடுத்து, ஹாங்காங்கில் சொத்துகளின் விலை சமீபத்தில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.