‍ஐபிஎல் தொடர் நடக்கும் அமீரக மைதானங்கள் – ஒரு குட்டிப் பார்வை!

இந்தாண்டு ஐபிஎல் தொடர், அமீரக நாட்டில் நடைபெறுகிறது. அந்நாட்டில் மொத்தம் 5 மைதானங்கள் உள்ளன. அந்த மைதானங்கள் குறித்து ஒரு சிறிய பார்வை இங்கே…

துபாய் கிரிக்கெட் மைதானம்

இது மைதானம் கடந்த 2009ம் ஆண்டு கட்டப்பட்டது. மொத்தம் 30 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில், பல டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஷேக் சயீத் மைதானம்

இந்த மைதானம் கடந்த 2004ம் ஆண்டு கட்டப்பட்டது. மொத்தம் 20,000 பேர் அமர்ந்து பார்க்கலாம். இங்கு, இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 2006ம் ஆண்டு ஒரு நட்புரீதியான போட்டி நடைபெற்றது.

ஷார்ஜா மைதானம்

ஷார்ஜாவில் முதன்முதலில் 1982ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்டேடியம் இது. இங்கு 17,000 பேர் ஒரேநேரத்தில் அமர்ந்து பார்க்கலாம். முதன்முதலாக, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இங்கு 1984ம் ஆண்டு ஒருநாள் தொடர் நடத்தப்பட்டது.

ஐசிசி அகடமி மைதானம்

இந்த மைதானம் உள்ளூர் போட்டிகளை நடத்த பயன்படுத்தப்படுகிறது. 2011ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் இங்கு நடைபெற்றது.

டாலரன்ஸ் ஓவல்

இம்மைதானத்தில் முதன்முதலாக 2018 மட்டும்தான் டி-20 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. அதன்பிறகு, நைஜீரியா மற்றும் ஹாங்காங் அணிகள் மோதி இருக்கின்றன.

You may have missed