3000 ஆபாச இணையதளங்கள் முடக்கம்- மத்திய அரசு      

டில்லி,

3000க்கும் அதிகமான ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று, இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் எழுத்து மூலம் பதிலளித்தது.

அதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச இணைய தளங்கள் வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் செயல்படுகின்றன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான இணையதளங்களை முடக்க சைபர் க்ரைமுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிஐ-ஆல் பரிந்துரைக்கப்படும்  ஆபாச இணையதளங்களை மத்திய அரசு அவ்வப்போது முடக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆபாச இணையதளங்களை முடக்கியிருப்பதாக கூறியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.