அதிபர் தேர்தலில் நிச்சய வெற்றி கிடைக்கும்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: நவம்பர் இறுதியில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: இது முக்கியமான தேர்தல். சிறப்பாக பணியாற்றி உள்ளோம். யாரும் செய்யாத சாதனைகளை எல்லாம் நாம் செய்துள்ளோம்.

தேர்தல் நேரத்தில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகள் வரும். 2016ம் ஆண்டு போலவே மீண்டும் வெற்றி பெறுவோம். அடுத்த வருடம் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்டதாக அமெரிக்கா இருக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை சரியாக கையாளாததால் அமெரிக்கா பெரும் பொருளாதார சேதத்தைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.