ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? அப்பல்லோவுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக்கோரி அம்ருதா என்ற இளம் பெண் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவின் ரத்தம் மாதிரி உள்ளதா என  அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில்,  கடந்த மாதம்  நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி பல கேள்விகளை எழுப்பியிருந்ர்தார். அப்போது,  ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில்,  ஜெயலலிதாவின் ரத்த மாதிரி  இருக்கிறதா? என்றும், ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவை அப்பா என்று உரிமை கோராதது ஏன் என்றும், அதை கூற எது தடுக்கிறது என்றும்  நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், இந்த வழக்கில் ஜெ.வின் அண்ணன் மகள், மகன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டி ருந்தார். இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது, தீபா மற்றும் தீபக் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “என் அத்தை ஜெயலலிதா வின் சொத்துகளைக் குறிவைத்தே அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்றும் தொடர்ந்து. அப்போது, நீதிபதி வைத்தியநாதன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா என கேள்வி எழுப்பினார். மேலும் இதுகுறித்து,  மார்ச் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அப்போலோ மருத்துவமனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்பதால், அவரது உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ‘அதற்காக டிஎன்ஏ பரிசோதனைக்கு தயாராக இருப்பதாகவும் அம்ருதா கூறிய நிலையில், அதற்கு அரசு தரப்பு ஆட்சேபணை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜெ.மகள் என அறிவிக்க கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு விவரம் காண கீழே உள்ள லிங்கை-ஐ கிளிக்கவும்

https://patrikai.com/i-am-daughter-of-jayalalitha-amruta-again-sued-in-chennai-high-court/

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Have Jayalalitha's blood samples? High Court Notice to Apollo Hospital, ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் உள்ளதா? அப்பல்லோவுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்
-=-