திருவனந்தபுரம்:

கேரளாவில் எந்த ஜாதி, மதத்தையும் சேராதவர் என்று குறிப்பிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 1.24 லட்சத்தை எட்டியுள்ளது.

கேரளாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் தாங்கள் எந்த ஜாதி, மதத்தையும் சேர்ந்தவரில்லை என்று குறிப்பிடும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இந்த வகையில் இது வரை 1.24 மாணவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கேரளா சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது சிபிஎம் எம்எல்ஏ முரளி இவ்வாறு பதிவு செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டார்.

இதற்கு கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் பதில் கூறுகையில், ‘‘ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 630 மாணவர்கள் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 11ம் வகுப்பில் 278 பேரும், 12ம் வ குப்பில் 239 பேரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது 2017-18ம் கல்வி ஆண்டின் புள்ளவிபரமாகும். மாவட்டம் வாரியான இந்த புள்ளிவிபரம் இல்லை. மாநிலத்தில் உள்ள 9 ஆயிரம் பள்ளிகளில் இருந்து இந்த தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.