டில்லி:

க்களவையில் ராகுலுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க கோரவில்லை என்றும், அது தொடர் பாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறு என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த மக்களவையின்போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மக்களவையின் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய மக்களவையில், ராகுல்காந்தி தனது தாயாருடன் முதல்வரிசையில் அமர்ந்து உள்ளார். இதை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையின் முதல்வரிசையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றில் சோனியா காந்தியும், மற்றொரு இடத்தில் ராகுலும் தற்போது அமர்ந்து உள்ளனர். இதுகுறித்து, ஏற்கனவே சோனியாகாந்தி, காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு முதல்வரிசையில் இடம் ஒதுக்கவும், ராகுலுக்கு இரண்டாவது வரிசையிலும் இடம் ஒதுக்க வேண்டும் என்று  வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், ராகுல்காந்தி முதல் வரிசையில் இடம் கேட்டதாகவும், அதை மத்தியஅரசு நிராகரித்து விட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது.  பாராளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு முன் வரிசையில் இருக்கக் கோரவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளது.  இதுபோன்ற ஒரு கோரிக்கையை காங்கிரஸ் கட்சியோ, ராகுல் காந்தியோ முன் வைக்கவில்லை என்று,  மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரிடிவிட்  செய்துள்ளார்.

மேலும், ராகுல் காந்திக்கு மக்களவையில் இருக்கை எண் 466 ஐ நாங்கள் முன்மொழிந்துள்ளோம். என்றும் தெரிவித்துஉள்ளார்.