ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி…சரபோவா கருத்து

--

‘‘ஊக்க மருந்து தண்டனையில் இருந்து மீண்டு வருவதே முதல் பணி. அதனால் 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து தற்போது நினைக்கவில்லை’’ என்று ரஷ்ய டென்னீஸ் வீராங்கணை மரிய சரபோவா தெரிவித்துள்ளார்.

இந்த ஒலிம்பிக் போட்டியல் சரபோவா வெல்வதற்கான தகுதி என்று ரஷ்ய டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் ஷமில் தர்பிஸ்சவ் கருத்து கூறியருந்ததை தொடர்ந்து சரேபாவா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்,அவர் கூறுகையில்,‘‘அவ்வளவு நீண்ட நாள் திட்டங்கள் எதுவும் என்னிடம் இல்லை. அது குறித்து தற்போது நான் நினைக்கவில்லை. ஸ்டட்கர்ட்ஸில் நடக்கும் போர்ஸ் டென்னிஸ் கிராண்ட் பிரிக்ஸ் மூலம் நான் திரும்பி வருவது குறித்து தான் எனது கவனம் உள்ளது. அதனால் டோக்கியோவில் நான் விளையாடுவேனா என்பது மிகப் பெரிய கேள்வி. இது தொடர்பாக நான் யாரிடமும் ஆலோசனை நடத்தவில்ல’’ என்று கூறினார்.

மேலும், சரபோவாக கூறுகையில்,‘‘ எனது உடல்நிலை ஒத்துழைத்தால் இந்த ஒலிம்பிக்கில் விளையாட விரும்புகிறேன். ஆனால், எனது உடல் எப்படி ஒத்துழைக்கும் என்பது தெரியவில்லை. தொடர்ந்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று வருகிறேன். அடுத்து என் வாழ்வில் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. எனினும் தேசிய அணிக்காக விளையாடுவேனா என்ற கேள்வி முன்கூட்டியே கேட்டகப்படும் கேள்வியாகும்’’ என்று கூறியுள்ளார்.

‘‘ நான் வி¬ளாடாமல் ஒலிம்பிக்கில் பலரும் போட்டியிட்டதை பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது. அதைவிட கிராண்ட் ஸ்லாம் தொடர் மற்றும் இதர போட்டிகளை தவறவிட்டது கவலை அளிக்கிறது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஊக்க மருந்து புகார் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் 2 ஆண்டுக்கு இடைநீக்கம் செய்யப்ட்டார். இதனால் 2016 ஒலிம்பிக் போட்டி உள்பட அனைத்து டென்னிஸ் போட்டிகளிலும் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2016ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி இந்த இடைநீக்க காலத்தை 15 மாதங்களாக குறைக்க வேண்டுமென சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்காக மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் சரபோவா வரும் ஏப்ரல் 26ம் தேதி ஸ்டட்கர்ஸில் நடக்கும் டென்னிஸ் போட்டியில் மீண்டும் விளையாட திட்டமிட்டு வருகிறார்.