தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்போதே ஹாஷ்டேக்கை உருவாக்கி மில்லியன் கணக்கில் ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

நடிகர் அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பிரம்மாண்ட கேக்குகளை தயார் செய்து அஜித் ரசிகர்கள் கூட்டமாக வெட்டி கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக லாக் டவுன் போடப்பட்டிருப்பதால், பழைய கேக் கட்டிங் புகைப்படங்களை பகிர்ந்தும், தியேட்டர்களில் செய்த அலப்பறைகளை பகிர்ந்தும் வருகின்றனர்.

#HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்தியளவில் டாப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர். மில்லியன் கணக்கான ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

இந்த ஹாஷ்டேக் உருவாக்கப்பட்ட 105 நிமிடத்திற்குள் இப்படியொரு இமாலய சாதனையை தல ரசிகர்கள் படைத்துள்ளனர்.