பிறந்தநாள் கொண்டாடும் சீமான்: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த #HBDSeemanAnna ஹேஷ்டேக்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரையுலகை சேர்ந்தவருமான சீமானின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்ததால், சமூக வலைதளத்தை #HBDSeemanAnna என்கிற ஹேஷ்டேக் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேர்தலில் தனித்து நின்று களம் கண்டு வருகிறார். ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது கட்சி தோல்வியை சந்தித்தாலும், அவற்றை பற்றி துளியும் கவலைக்கொள்ளாமல், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் துவக்கம் என எல்லாவற்றிலும் முதல் நபராய் நிற்பார் சீமான். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உடன் அவர் இருந்தது தொடர்பாகவும், அவரது அரசியல் கருத்துக்கள் தொடர்பாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமூகவலைதளத்தில் பலரும் சீமானை பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை சீமான் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி ட்விட்டரில் திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களான சீமானின் தம்பிகளும், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோரும், சீமான் உடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து சீமானுக்கு பலதரப்பட்ட மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதால், சமூக வலைதளத்தை #HBDSeemanAnna என்கிற ஹேஷ்டேக் முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி