ஹெச்பிஓ நவ் என்ற ஸ்ட்ரீமிங் சேவையில் ஹெச்பிஓவுக்கு சொந்தமான படங்களை, தொடர்களை மட்டுமே பார்க்க முடியும்.

மேக்ஸ் சேவையில், வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்கள், வார்னர் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஏற்கெனவே ஹெச்பிஓ தொலைக்காட்சிக்கென இருக்கும் திரைப்படங்கள், தொடர்கள் ஆகியவையும் சேர்த்து இடம்பெறும்.

‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ முதல் ‘ப்ரண்ட்ஸ்’ தொடரும் ஹெச்பிஓ வசம் இருப்பதால், அதுவே பலரை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதம் 14.99 டாலர்கள் என்ற கட்டணத்தில் அமெரிக்காவில் தற்போது அதிக விலையில் கிடைக்கும் ஸ்ட்ரீமிங் சேவை இதுவே. யூடியூப் தொலைக்காட்சி வழியாகவும் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

வார்னர் மீடியாவின் புதிய ஸ்ட்ரீமிங் சேவையான ஹெச்பிஓ மேக்ஸ், மே 27-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.