Random image

டாஸ்மாக் ஏன் மதியம் 2 மணிக்கு திறக்கக் கூடாது ? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை

மிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மது பான கடைகளை மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன ஆகும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசை கேட்டுள்ளது.

கடந்த மே மாதம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஊருக்கு உள்ளே திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.   அப்போது போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.   அவர்களுக்கு ஜாமீன் கோரி வழக்கு தொடரப் பட்டுள்ளது.   அந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில்  அமர்வு டாஸ்மாக் கடைகளை தற்போது திறக்கப்படும் மதியம் 12 மணிக்கு பதில் 2 மணிக்கு ஏன் திறக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது.   இதற்கு அரசு சார்பில் இது தமிழக அரசின் கொள்கை முடிவு என பதில் அளிக்கப்பட்டது.

அதற்கு அமர்வு ”டாஸ்மாக் திறக்கும் நேரத்துக்கும் அரசின் கொள்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது?  சிறிது தாமதமாக திறந்தால் அரசின் கொள்கைக்கு என்ன பிரச்னை வரும்?” என கேள்வி எழுப்பியது.  மேலும் அரசுக்கு அமர்வு கேள்விக்கு மேல் கேள்விக் கணைகளை தொடுத்துள்ளது.