6 மாதத்தில் முழு மதுவிலக்கு!

பகேஷ்வர்:

த்தரகாண்ட் மாநிலத்தில் 6 மாதத்திற்குள் முழு மதுவிலக்கு அமல்படுத்த அம்மாநில உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

குடி குடியை கெடுக்கும் என்பது போல தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மதுவினால் பெரும்பாலேனோர் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். மது காரணமாக பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பல மாநிலங்களில் மதுவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அவ்வப்போது புதுப்புது டாஸ்மாக் கடைகளை திறந்து தமிழக மக்களை குடிகாரர்களாக தமிழக அரசு மாற்றி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகரித்துவரும் மதுப்பழக்கத்தை ஒழிக்க மாநில அரசும் திட்டமிட்டு செயல்பட்ட வரும் நிலையில், உத்தரகாண்ட மாநிலம் பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருடா பகுதியைச் சேர்ந்த ஜோஷி என்ற வழங்கறிஞர், மாநிலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தக்கோரி,  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைகளின் போது, மாநிலஅரசும் படிப்படியாக மதுவை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியது.

இந்த வழக்கில் உத்தரகாண்ட் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி அலோக் குமார் வர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், மாநிலத்தில், மதுவை படிப்படியாக குறைக்கும் கொள்கை முடிவுகளை அரசு உடடினயாக எடுக்க வேண்டும் என்றும், அடுத்த 6 மாதத்திற்குள் மதுக்கடைகள் முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளனர்.