காட்டை அழித்து சொகுசு விடுதி கட்டிய பாஜக முதல்வர் மகனுக்கு நோட்டிஸ்

னாஜி

காட்டை அழித்து சொகுசு விடுதி கட்டியதாக மும்பை நீதிமன்ற கோவா கிளை மனோகர் பாரிக்கரின் மகன் அபிஜத் பாரிக்கருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

தெற்கு கோவாவில் நெட்ரவாலி வனப்பகுதியில் ஒரு வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஒரு சுற்றுச் சூழலை பாதிக்காத சொகுசு விடுதி ஒன்றை பாஜக அரசின் அனுமதியுடன் அமைத்து வருகிறார். இந்த சொகுசு விடுதி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே இது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சொகுசு விடுதியை அமைக்க அனுமதி அளிக்க பல சட்ட மீறல்கள் நடந்துள்ளதாகவும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது.

இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. கோவா மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர், “இந்த சொகுசு விடுதி கட்டுவதில் எந்த ஒரு சட்ட மீறலும் நடைபெறவில்லை. அபிஜத் பாரிக்கர் அண்டஹ் நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார். எங்களுக்கு முதல்வர் மனோகர் பாரிக்கர் மீதும் அவர் மகன் அபிஜத் பாரிக்கர் மீதும் முழு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெட்ரவாலி கிராமத் தலைவர் அபிஜித் தேசாய் இந்த கட்டுமானத்தை நிறுத்தக் கோரி மும்பை உயர்நீதிமன்ற கோவா கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்த்ள்ளார். இந்த மனுவை விசாரிக்கும் அமர்வு இது குறித்து வரும் மார்ச் 11க்குள் விடை அளிக்க வேண்டும் என அபிஜத் பாரிக்கருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டிஸ் கோவா மாநில தலைமை செயலர், வனப் பகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை செயலர், வன பாதுகாப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.