மடங்களின் சொத்து விவரங்களைக் கேட்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

துரை

மிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதினம் மற்றும் மடங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நிதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   அந்த மனுவில், “தூத்துக்குடி செங்கோல் ஆதின மடத்தின் சொத்துக்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.   அதை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.    இந்த ஆக்கிரமிப்பினால் ஆதினத்தின் வருமானம் குறைந்துள்ளது.   அதீனம் நிர்வாகம் செய்து வரும் பல கோயில்களில் இதனால் வழக்கமான பூஜைகளும் நடத்த முடியவில்லை.”  எனக் கூறப்பட்டிருந்தது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவில் நீதிமன்றம், “தமிழ்நாட்டில் உள்ள அனத்து ஆதின மடங்களின் சொத்து விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட வேண்டும்   தாக்கல் செய்யப்படும் நில விவரங்களை தமிழக பத்திரப் பதிவுத்துறை தலைவர் ஆய்வு செய்ய வேண்டும்.    ஆய்வின் மூலம்  சொத்துக்களின்  உண்மையான உரிமையாளர் யார் என்பதை தெளிவாக்க வேண்டும்.    ஏதேனும் நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டிருந்தால் உடனடியாக அதை மீட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.